திருச்செந்தூர் ஆகட்டும், தஞ்சாவூர் ஆகட்டும், மதுரை ஆகட்டும், ஸ்ரீரங்கம் ஆகட்டும்... எந்த கோவிலுக்குப் போனாலும் ஒரு பிரமிப்பு ஏற்படாமல் இருப்பதில்லை! எப்படி கண்ணால் காண இயலாத தெய்வத்துக்கு இவ்வளவு பிரம்மாண்டமாக கோவில்களைக் கட்டத் தோன்றியது!..உலகில் வேறெங்கும் இது போல் பார்க்க முடிவது இல்லையே! எப்படி பண்டைய தமிழ் நாட்டில் மட்டும் இது சாத்தியமாகியது?! கட்டிய அரசனின் சாம்ராஜ்யம் காலப் பெருவெள்ளத்தில் காணாமல் போய்விட்டாலும், அவன் கட்டிய கோவில் காலத்தை வென்று, ஏதோ ஒரு செய்தியை மௌனமாகச் சொல்லிக்கொண்டே இருக்கிறது!
பாராட்டுபவர்கள் , வியப்பவர்கள், வியாக்கியானம் செய்பவர்கள், வெறுப்போடு விமர்சிப்பவர்கள்..எல்லோரும் கால வெள்ளத்தில் காணாமல் போன பிறகும், தேடி வருவோர்க்கு சாந்தியும் அமைதியும் தந்து கொண்டு நெடிது வாழ்கின்றன நம் கோவில்கள்..
***
No comments:
Post a Comment